உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

திண்டுக்கல் அருகே பைக் திருடியவர் கைது

Update: 2022-04-17 08:48 GMT
திண்டுக்கல் அருகே பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே குட்டத்துப்பட்டியை சேர்ந்தவர் ஸ்டீபன் ஆரோக்கியதாஸ் (வயது 26). ஆட்டோ டிரைவர்.
சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை ஆட்டோ நிறுத்தத்தில் நிறுத்தி இருந்தபோது திருடு போனது.

இது-குறித்து தாலுகா போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் பாலாண்டி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் கொட்டபட்டி பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஒரு பைக்கை நிறுத்தி விசாரணை நடத்தியபோது வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

கிடுக்கிப்பிடி விசாரணையில் அந்த பைக் ஸ்டீபன் ஆரோக்கியதாஸ் என்பவரது பைக் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து பைக்கை பறிமுதல் செய்து அதனை ஓட்டி வந்த சரண்சிங் (19) என்பவரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News