உள்ளூர் செய்திகள்
பிறவி மருந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில்
கொண்டாடப்பட்ட தேரோட்ட திருவிழாவில் லாரி உரிமையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் குமாரசாமி முன்னிலை வகித்தார்.
இதில் ஆன்மீகச் செம்மல் புலவர் டாக்டர் திவாகர் கலந்துகொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்வில் லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஆறுமுகம், செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் லாரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.