உள்ளூர் செய்திகள்
மணமக்களை ஆணையர் கார்த்திகேயன் வாழ்த்தினார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில் திருமண பதிவு

Published On 2022-04-08 05:59 GMT   |   Update On 2022-04-08 05:59 GMT
10 ஆண்டுகளுக்கு பிறகு பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில் திருமண பதிவு செய்ய ஆணையர் கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் திருமண பதிவுகள் வருவாய் துறையின் கீழ் உள்ள பதிவாளர் அலுவலகம் மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் உள்ள பஞ்சாயத்து, நகராட்சி அலுவலகத்தில் நடப்பது வழக்கம். 

இதுபோல தாசில்தார் அலுவலகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திலும், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்திலும் நடக்க வேண்டும். ஆனால், சார்பதிவாளர் அலுவலகத்தில் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே திருமண பதிவுகள் நடத்தப்பட்டு வருகிறது. பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக திருமண பதிவுகள் சில காரணங்களால் நிறுத்தப்பட்டு இருந்தது. 

இது சம்பந்தமாக தற்பொழுது உள்ள பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயனிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் திருமணப் பதிவுகள் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

இதற்கான ஏற்பாடுகளை ஆணையர் கார்த்திகேயன் செய்தார். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திருமண பதிவு பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆணையர் கார்த்திகேயன், மேலாளர் ரவி மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். முதல் திருமணம் செய்த மணமக்களுக்கு வாழ்த்-துக்கள் தெரிவிக்கப்பட்டது.

இது சம்பந்தமாக ஆணையர் கார்த்திகேயன் கூறும்போது, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இணங்க திருமண பதிவுகள் கொம்யூன் பஞ்சாயத்திலும் நடக்கிறது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  திருமணம் ஆன 15 நாட்களுக்குள் விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். உரிய ஆவணங்கள் பெற்று திருமண பதிவு உடனுக்குடன் வழங்கப்படும் என்றார்.
Tags:    

Similar News