உள்ளூர் செய்திகள்
சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த சின்ன வெங்காயம்.

சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி

Published On 2022-03-21 12:47 IST   |   Update On 2022-03-21 12:47:00 IST
அந்தியூர் சந்தைக்கு சின்ன வெங்காயம் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் விலை விழ்ச்சியடைந்து விற்பனை செய்யப்பட்டது.
அந்தியூர் 

அந்தியூர் சந்தைக்கு சின்ன வெங்காயம்  அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் விலை விழ்ச்சியடைந்து விற்பனை செய்யப்பட்டது.

அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளான தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், புதுக்காடு, காந்தி நகர், புதுபாளையம், எண்ணமங்கலம், வட்டகாடு, பள்ளிபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேவையான காய்கறிகள் பயிரிட்டு வாரந்தோறும்  ஞாயிறு மற்றும் திங்கட் கிழமைகளில் வாரச் சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். 

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயத்தின் விலை 25 கிலோ கொண்ட சிப்பத்தின் விலை ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனையாகி வந்தது.  இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.250 -ரூ.200 என்று கடும் சரிவை கண்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகளிடத்தில் கேட்டபோது சின்ன வெங்காயத்தின் விளைச்சல் அதிகரித்து இருப்பதால் இந்த விலை குறைவு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

Similar News