உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அளவுக்கு அதிகமாக மது குடித்த பனியன் தொழிலாளி சாவு

Published On 2022-03-21 12:15 IST   |   Update On 2022-03-21 12:15:00 IST
சென்னிமலை அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த பனியன் தொழிலாளி பலியான சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை

சென்னிமலை அருகே  அளவுக்கு அதிகமாக மது குடித்த பனியன் தொழிலாளி பலியான சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னிமலை அருகே  உள்ள மின்னகாடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன், (39)இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.

 தினமும் மது குடித்துவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்தார்.   வழக்கம்போல் சம்பவத்தன்று காலையில் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற முருகேசன் அன்று இரவு வீடு திரும்பவில்லை.

 இந்த நிலையில் சென்னிமலை அருகே ஓட்டப்பாறை ஊராட்சிக்குட்பட்டநெடுஞ்சுனைபாறை என்ற இடத்தில் முருகேசன் இறந்து கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கும் தெரிய வந்தது.  

பின்னர் முருகேசனின் மனைவி தவமணி, (38)என்பவர் சென்னிமலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முருகேசனின் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் முருகேசன் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் கீழே தவறி விழுந்ததில் இறந்திருக்கலாம் என தெரியவந்தது.

Similar News