உள்ளூர் செய்திகள்
கோப்புபப்படம்

கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

Published On 2022-03-20 15:03 IST   |   Update On 2022-03-20 15:03:00 IST
தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாளவாடி

தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு போன்ற கால் நடைகளை வேட்டை ஆடுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி அருகே உள்ள சேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 55). விவசாயி. இவரது தோட் டத்தில் கரும்பு பயிரிட்டு உள்ளார். நேற்று மாலை அவர் தோட்டத்துக்கு சென்றார்.
அப்போது தோட்டத்தின் ஓரம் சிறுத்தை ஒன்று படுத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். காளியப்பனை பார்த்ததும் சிறுத்தை கரும்பு தோட்டத் திற்குள் சென்று பதுங்கி கொண்டது.

இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருக்கும் சிறுத்தை எந்நேரமும் தாக்கக் கூடும் என்பதால் அந்த பகுதிக்கு யாரும் செல்லவில்லை. 

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரும்பு தோட்டத்துக்குள் பதுங்கியிருக்கும் சிறுத்தை யை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News