உள்ளூர் செய்திகள்
புகையிலை பொருட்கள்

ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2022-03-19 15:08 IST   |   Update On 2022-03-19 15:08:00 IST
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காரில் கடத்திய ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர் 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நமச்சிவாயம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் மதுரை&-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மூவரைவென்றான் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது அந்த வழியாக வந்தகாரை மறித்து விசாரித்தனர். காரில் இருந்த வர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனையிட்டனர்.

அப்போது காரில் தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ 2 லட்சத்து 14ஆயிரத்து 650ஆகும்.

இதையடுத்து காரில் இருந்த ராஜபாளையம் சிங்கராஜாகோட்டை பெரிய தெருவை சேர்ந்த முத்து மணி (வயது45), ராஜபாளையம் முகில் வண்ணன்பிள்ளை தெருவை சேர்ந்த கருப்பசாமி (40) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் புகையிலை பொருட்களை அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வாங்கி வந்ததாகவும், அதனை வியாபாரிகள் அம்மா பட்டியை சேர்ந்த சம்பத், சுந்தரபாண்டியம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம், புதுப்பாளையம் தெருவைச் சேர்ந்த சிங்கம் என்ற கருப்பையா ஆகிய மூன்றுபேரிடம் விற்பனை செய்துவந்ததாக கூறினர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வியாபாரி சம்பத்தையும் கைதுசெய்தனர். மற்ற 2பேரை தேடி வருகின்றனர்.

Similar News