உள்ளூர் செய்திகள்
ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்

விவசாயிகள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்

Published On 2022-03-19 13:03 IST   |   Update On 2022-03-19 13:03:00 IST
விவசாயிகள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்

பிரதமரின் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ 2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ 6 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 

இத்திட்டத்தின் கீழ்     விருதுநகர் மாவட்டத்தில் 80150 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.  ஏப்ரல் 2022 முதல்  பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் ஆதார் எண் அடிப்படையில் ஊக்கத்தொகை  வழங் கப்பட உள்ளது. 

எனவே இத்திட்டத்தில் பயனடைந்து வரும் விருதுநகர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் தங்களது வங்கி கணக்கு எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்க வேண்டும். 

ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்காத 16908 விவசாயிகள் உடனடியாக தங்களது ஆதார் எண்ணை தங்களது வங்கிக்கணக்குடன் இணைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்தார்.

Similar News