உள்ளூர் செய்திகள்
புகையிலை பொருட்களை விற்ற 5 பேர் கைது
ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடை வீதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடைவீதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா? என ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன் ஆலோசனையின் பேரில் சிறப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையிலான போலீசார் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில் ஜெயங் கொண்டம் விருத்தாச்சலம் ரோடு ராஜகோபால்(62), ஜெயங்கொண்டம் மேட்டுத் தெரு அமுதா (41),மறவன் குடியிருப்பு துரை (53), ஜெயங்கொண்டம் சிவக் குமார் (51), ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலை சுரேஷ் (32) ஆகியோர் தங்கள் கடைகளில் பதுக்கி வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து சுரேஷ், சிவகுமார், துரை, அமுதா, ராஜகோபால் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.