உள்ளூர் செய்திகள்
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
ஆண்டிமடத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடை பெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஒன்றியம் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆண்டிமடம் ஒன்றிய குழு தலைவர் மருதமுத்து தலைமை தாங்கினார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவாஜி அருளப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை, குழந்தை தொழிலாளர், பள்ளி இடைநின்ற மாணவ-மாணவிகள், நிதி உதவி தேவைப்படும் குழந்தைகள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோரை இழந்த குழந்தைகள் தொடர்பான கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டன.
மேலும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வழங்குதல், பள்ளிகளில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் யோகா வகுப்பை குழந்தைகளின் நல்வாழ்வுக்காக ஏற்படுத்தவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர், காவல்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு 1098, ஊராட்சி மன்ற தலைவர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், சமூகநலத்துறை போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.