உள்ளூர் செய்திகள்
பாலியல் தொல்லை- தந்தை மீது வழக்குப்பதிவு
ராஜபாளையத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 12வயது மாணவி தளவாய்புரம் பகுதியில் உள்ள பள்ளியில் 7ம்வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை மதுபழக்கத்துக்கு அடிமையானதால் சரியாக வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து வந்தார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழு ஊரடங்கு பிறப்பிக் கப்பட்டு இருந்தது. அப் போது குடும்ப சூழ்நிலை காரணமாக மாணவி தையல்வேலை பார்த்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட குடிகார தந்தை பெற்ற மகள் என்றும் பாராமல் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து மகள் தனது தாயாரிடம் தெரிவித் துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர் தனது கணவரை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் திருந்தவில்லை. இதையடுத்து பெரியவர்கள் முன்னிலையில் பேசி அவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
மாணவி மீதான பாலியல் தொல்லை குறித்த தகவல் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு கிடைத்தது. அதிகாரிகள் அங்கு சென்று விசாரித்ததில் உண்மை என தெரியவரவே அவர்கள் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் மரியபாக்கியம் வழக்குப்பதிவு செய்து மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை தேடி வருகின்றனர்.