உள்ளூர் செய்திகள்
கோபிசெட்டிபாளையம் நகராட்சி கூட்ட அறை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

கோபிசெட்டிபாளையத்தில் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்க ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2022-02-24 15:38 IST   |   Update On 2022-02-24 15:38:00 IST
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்க ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மன்றகூடம் தூய்மை செய்யும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
கோபி:

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்க ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மன்றகூடம் தூய்மை செய்யும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில்  நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 14 இடங்களிலும்,அ.தி.மு.க. 13 வார்டுகளிலும், காங்கிரஸ் கட்சி 2 வார்டுகளிலும், சுயேச்சையாக போட்டியிட்ட ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதையடுத்து அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய  கோபிசெட்டிபாளையம் நகராட்சியை தற்போது தி.மு.க. கைப்பற்றியுள்ளது. இதையடுத்து  புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா வருகிற 2&ந் தேதி நடக்கிறது.

கோபிசெட்டிபாளையம் நகராட்சியின் மேல்தளத்தில் உள்ள கூட்ட அறையில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்கும் விழா நடக்கிறது. 

இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.பணியாளர்கள் மன்ற கூடத்தில் தூய்மை பணி மேற்கொண்டு வருகிறார்கள். 

பின்னர்   மன்ற உறுப்பினர்கள்  மற்றும் அதிகாரிகளுக்கு நாற்காலிகள் மற்றும் மேஜை  அமைக்கப்படும். 

பல ஆண்டுகளுக்கு பிறகு புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பதால் கோபி செட்டி பாளையம் நகராட்சி அலுவலகம் புதுப்பொலிவை பெற்றுள்ளது.

Similar News