உள்ளூர் செய்திகள்
வீட்டில் பதுக்கி வைத்த 1050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
அரச்சலூர் அருகே வடமாநிலத்தவருக்கு விற்பனை செய்ய வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 1050 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
அரச்சலூர் அருகே வடமாநிலத்தவருக்கு விற்பனை செய்ய வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 1050 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் சமீபகாலமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
இங்கு அதிக அளவில் வடமாநி லத்தவர்கள் தங்கி உள்ளதால் அவர்களிடம் கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.
இதனை தடுக் கும் பொருட்டு ஈரோடு மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த வாளத்தோட்டம் வலசு பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புல னாய்வுத்துறை இன்ஸ் பெக்டர் பன்னீர் செல்வத் திற்கு தகவல் வந்தது.
அவரது உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் போலீசார் வாள தோட்டம்வலசு பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1050 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர் அதில் திருப் பூர் மாவட்டம் வெள்ளக் கோவில், தண்ணீர் பந்தல் பாளை யம் பகுதியை சேர்ந்த உதய குமார் (வயது 32) என்பவர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்தி ருந்தது தெரிய வந்தது.
இவர் அந்த பகுதியில் வசிக்கும் வடமாநிலத் தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
போலீஸ் வருவதை தெரிந்து கொண்ட உதயகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனையடுத்து 1,050 கிலோ ரேஷன் அரிசியையும், மோட்டார் சைக்கிளையும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய உதயகுமாரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.