உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

Published On 2022-02-24 15:24 IST   |   Update On 2022-02-24 15:24:00 IST
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் கீழ்பவானிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது.
சத்தியமங்கலம்:

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் கீழ்பவானிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது.

பவானி சாகர் அணையின் முலம் ஈரோடு, திருப்பூர், கருர் மாவட்டத்தில் உள்ள லட்சக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.  

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. 

ஆனாலும் தொடர்ந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி பாசனம், குடிநீர் தேவை  கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. 

நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் பவானி சாகர்அணையின் நீர்மட்டம் கிடு கிடு வென குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் கீழ்பவானி பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. 

இன்று காலை 8 மணிநிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.07 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 812 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. 

அணையில்இருந்து தடப்பள்ளி, அரக்கன் கோட்டை பாசனத்துக்கு வினாடிக்கு 700 கனஅடியும், குடிநீர் தேவைக்காக 100  கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.

Similar News