உள்ளூர் செய்திகள்
செல்போன் மூலம் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
மதகடிப்பட்டில் செல்போன் மூலம் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை-விழுப்புரம் மெயின் ரோடு புதுவை எல்லையான மதகடிப்பட்டு நுழைவு வாயில் அருகே செல்போன் மூலம் ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு லாட்டரி விற்பனை செய்வதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர். அப்போது ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலம் லாட்டரி முடிவுகளை கூறிக்கொண்டிருந்தார்.
உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கொத்தபுரி நத்தம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த ராஜாராம்(45) என்பதும், இவர் செல்போனில் வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ராஜாராமை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன் மற்றும் லாட்டரி விற்பனை பணம் பறிமுதல் செய்யப்பட்டது.