உள்ளூர் செய்திகள்
அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சியை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
புதுச்சேரி:
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் மகத்தான சாதனைகள் குறித்த கண் காட்சி நாடு முழுவதும் நடக்கிறது.
புதுவை மாநிலத்தில் 75 இடங்களில் இந்த கண்காட்சி நடக்கிறது. அதில் கண்காட்சி, விரிவுரை, திரைப்படங்கள், வானொலி பேச்சுகள், அறிவியல் இலக்கிய நடவடிக்கைகள், சுவரொட்டிகள் என அனைத்து நிகழ்வுகளும் தலா 75 என்ற அளவில் நடத்தப்பட உள்ளது.
இதன் தொடக்கவிழா லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் உள்ள டாக்டர் அப்துல்லகாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் 28-ந் தேதி வரை நடக்கிறது.
தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இங்கு இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பத்தின் மைல் கற்கள் மற்றும் விஞ்ஞானிகளை மையப்படுத்தி கண்காட்சி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சியும் நடக்கிறது.
இதனை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்து பார்வையிட்டார். விழாவில் முதல்&அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அறியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்துறை செயலர் ஸ்மித்தா, முதன்மை பொறியாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை அங்கிருந்த மாணவர்களோடு கலந்துரையாடினார்.