உள்ளூர் செய்திகள்
திருபுவனை தொகுதி பா.ஜனதாவினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த போது எடுத்த படம்.

திருபுவனையில் பா.ஜனதா போராட்டம்

Published On 2022-02-22 12:34 IST   |   Update On 2022-02-22 12:34:00 IST
மண்ணாடிப்பட்டு தொகுதியில் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:

மண்ணாடிப்பட்டு தொகுதியில் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருபுவனை தொகுதி பா.ஜனதாவினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

திருபுவனை தொகுதி பா.ஜனதா பொறுப்பாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து  புகார் அளித்தனர்.

இதில், திருபுவனை தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். என்ற பொன்னுசாமி, ஜெய ராமன், மாநில எஸ்.சி. அணி செயலாளர் வீரப்பன், பா.ஜனதா நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, நல்லூர் பாஸ்கர், ஐங்கிரிவன், திருபுவனை ராம்குமார், ஸ்ரீதர், செல்லிபட்டு நாகலிங்கம், கோவிந்தன், குச்சி பாளையம் சண்முகம், சன்னியாசிகுப்பம் சிவக் கொழுந்து, கலிதீர்த்தாள்குப்பம் நாராயணமூர்த்தி, பாலகுமார் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்/

Similar News