உள்ளூர் செய்திகள்
வாரசந்தையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

காரைக்கால் வாரசந்தையில் அதிகாரிகள் சோதனை: போலி தராசுகள்- எடைகற்கள் பறிமுதல்

Published On 2022-02-21 16:49 IST   |   Update On 2022-02-21 16:49:00 IST
வியாபாரிகள் பயன்படுத்தப்படும், தராசு மற்றும் எடைக்கற்கள் முறைப்படி வருவாய்துறை எடை அளவுப்பிரிவால் முத்திரை வைக்கப்படாமலும், எடை அளவு குறைவாக இருப்பதாகவும், பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியான புகார்கள் சென்றது.
காரைக்கால்:

காரைக்கால் திருநள்ளாறு சாலை பிள்ளைத் தெருவாசல் சந்திப்பில் உள்ள நகராட்சித்திடலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வந்தது. இப்பகுதியில் அண்மைக்காலமாக மழை பெய்ததால் சேறும் சகதியுமாக மாறியது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டதால், அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்திற்கு சந்தை தற்காலிமாக இடம் மாற்றம் செய்யப்படது.

இச்சந்தையில் வியாபாரிகள் பயன்படுத்தப்படும், தராசு மற்றும் எடைக்கற்கள் முறைப்படி வருவாய்துறை எடை அளவுப்பிரிவால் முத்திரை வைக்கப்படாமலும், எடை அளவு குறைவாக இருப்பதாகவும், பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியான புகார்கள் சென்றது.

அதனை தொடர்ந்து தாசில்தார் பொய்யாத மூர்த்தி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் வாரசந்தையில் திடீர் ஆய்வு செய்தனர். இதில், சுமார் 10 கடைகளில் எடை சரியில்லாத தராசுகளும், முத்திரை இல்லாத எடை கற்களும் பறிமுதல் செய்யப்பட்டது. எடைக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் உரிய அபராதம் செலுத்தியப் பிறகே எடைக் கற்களும், தராசுகளும் திரும்பத் தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News