உள்ளூர் செய்திகள்
சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம் எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத், செந்

சபாநாயகருடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

Published On 2022-02-21 14:29 IST   |   Update On 2022-02-21 14:29:00 IST
சபாநாயகரை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீரென சந்தித்தனர்.
புதுச்சேரி:

புதுவை சட்டசபை 23-ந் தேதி (புதன்கிழமை) கூடுகிறது. சபை ஒருநாள் மட்டுமே நடைபெறும் என தெரிகிறது.

இந்த நிலையில் புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்க் கட்சித்தலைவருமான சிவா தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார் ஆகியோர் சட்டசபையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்து தி.மு.க. சார்பில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சட்டசபை வருகிற 23&ந் தேதி கூட்டப்படுகிறது. இதில் நீட் விலக்கு மசோதா, மின்துறை தனியார் மயத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்துவது போன்ற பல முக்கிய பிரச்சினைகளை தீர்மானத்துக்கு ஏற்க வேண்டும். 
பா.ஜனதா கூட்டணி அரசு புதுவையை பெஸ்ட் புதுவையாக எப்படி கொண்டு செல்கிறது? என விவாதிக்க வேண்டும். 

தமிழகம் போல் புதுவையிலும் நீட் தேர்வு விலக்கு மசோதா கொண்டு வர வேண்டும். மத்திய அரசின் நிதியை அதிகமாக பெற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மழை நிவாரணம் வழங்க கோர வேண்டும். உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்க வேண்டும். 

மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து ஊழியர்கள் போராடி வருகின்றனர்.  இந்த நிலையில் மின் கட்டண ரசீது வழங்கும் பணி தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது குறித்து விவாதிக்க வேண்டும். மருத்துவக் கல்லூரி கட்டண வசூல் குறித்தும், சட்டசபையில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாதது குறித்தும் விவாதிக்க வேண்டும். 

புதுவையின் கடன்சுமை, வேலை வாய்ப்பின்மை, ஆயுஷ்மான்பாரத் திட்டம், மருத்துவ நிதியுதவி பிரச்சினை உட்பட பல்வேறு மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டியுள்ளது. எனவே சட்டசபையை ஒரு வாரத்துக்கு மேல் நடத்த வேண்டும். 

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News