உள்ளூர் செய்திகள்
காப்பர் கம்பி திருடிய 2 பேர் கைது
கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் காப்பர் கம்பி திருடிய 2 பேரை போலீசார் கைது
புதுச்சேரி:
புதுவை கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
அங்குள்ள 4-வது மாடியில் நடைபெறும் கட்டிட வேலைக்காக காப்பர் கம்பிகள் வைக்கப் பட்டிருந்தது. ரூ.3 லட்சம் மதிப்பிலான இந்த காப்பர் கம்பிகளை நேற்று நிர்வாகத் தின் எலக்ட்ரிக்கல் பிரிவின் இளநிலை பொறியாளர் ராம் எடுக்க வந்த போது அந்த காப்பர் கம்பிகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த அவர் கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் மருத்துவமனையில் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
சந்தேகமடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது காப்பர் கம்பிகளை அவர்கள் திருடியது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் அவர்கள் பட்டானூர் வசந்தபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(28), புதுவை குறிஞ்சிநகர் 12 வது குறுக்கு தெருவை சேர்ந்த மதிவாணன் (28) என்பது தெரியவந்தது.
4 மாதத்துக்கு முன்னர் இவர்கள் 2 பேரும் தங்களது உறவினர் ஒருவரை பிரசவத்துக்கு அனுமதிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளனர்.
அப்போது இருவரும் 4-வது மாடிக்கு சென்றுள்ளனர். அங்கு அங்கு காப்பர் கம்பிகள் இருந்ததை பார்த்துள்ளனர். இருவரும் கூலி தொழிலாளி கள் என்பதால் காப்பர் கம்பி களை வெட்டி எடுத்து செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி இரவு நேரத்தில் 4-வது மாடிக்கு சென்று அங்கிருந்து காப்பர் கம்பிகளை வெட்டி பின்பக்கம் போட்டுள்ளனர். அங்கு கட்டிட வேலைக்காக மணல் கொட்டி வைத்திருந் ததால் கம்பி விழும் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை.
இதையடுத்து காப்பர் கம்பிகளை பையில் வைத்து எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.