உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

சாராயம் மாமூல் கேட்டு மிரட்டிய கும்பல்

Published On 2022-02-21 14:18 IST   |   Update On 2022-02-21 14:18:00 IST
வில்லியனூர் அருகே மாமூலாக சாராயம் கேட்டு மிரட்டல்
புதுச்சேரி : 

புதுவை வில்லியனூர் கீழூ அக்ரஹாரம் கிராமத்தை  சேர்ந்தவர் சோலைமணி.  இவர் அரசு அனுமதியுடன் அப்பகுதியில் சாராயக்கடை நடத்தி வருகிறார்.   கிளிஞ்சுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்(வயது30), பிரதாப், ராமமூர்த்தி ஆகியோர் சாராயக் கடைக்கு வந்தனர்.

சாராயக்கடையில் சாராயம்  விற்பனை செய்து கொண்டிருந்த ஊழியரிடம் 5 பாக்கெட் சாராயத்தை வாங்கி குடித்தனர். அப்போது சாராயம் கொடுத்த விற்பனையாளர் அதற்கான பணத்தை அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, நாங்கள் எப்போது வந்து கேட்டாலும் எங்களுக்கு சாராயம் மாமூலாக  கொடுக்க வேண்டும் என்று மிரட்டி சென்றனர்.

இதுகுறித்து  சாராயக்கடை உரிமையாளர் சோலைமணி மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்&இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து  ராமச் சந்திரனை கைது செய்தனர். மற்ற  2பேரை தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்டுள்ள  ராமச்சந்திரன் மீது தமிழக காவல் நிலையங்களில் மணல் திருட்டு வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News