உள்ளூர் செய்திகள்
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் தபால் ஓட்டு பெட்டி
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் தபால் ஓட்டு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேலூர் மாநகராட்சியில் 58 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் வாக்குச்சாவடி மையங்கள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
மேலும் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் சின்னம் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது.
எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் தபால் வாக்குகள் அளிப்பதற்காக தபால் வாக்கு சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சியில் மொத்தம் 657 தபால் வாக்குகள் உள்ளன.
இதனிடையே தபால் வாக்கு சீட்டுகள் பெறும் வகையில் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் தபால் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.
மாநகராட்சி அலுவலகத்தில் வரவேற்பு பகுதியில் இந்த பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதில் 1-வது வார்டு முதல் 60- வது வார்டு வரையில் உள்ள தபால் வாக்காளர்கள் தங்களது வாக்கை கவரில் போட்டு செலுத்தலாம்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 22-ந்தேதி காலை 8 மணி வரை தபால் வாக்குகள் செலுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.