உள்ளூர் செய்திகள்
புறம்போக்கு நிலங்களை அகற்றக்கோரி உண்ணாவிரத போராட்டம்
சிமெண்ட் ஆலைகள் ஆக்கிரமித்துள்ள நீர்நிலை புறம்போக்குகளை அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சிமெண்டு ஆலைகள் ஆக்கிரமித்துள்ள நீர்நிலை புறம்போக்கு, சுடுகாடு புறம்போக்கு, கோவில் இடங்கள் ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இதே கோரிக்கையை முன்வைத்து கடந்த காலங்களில் பல்வேறு விதமான போராட்டங்களையும் அவர்கள் முன்னெடுத்து வந்துள்ளனர். ஆனாலும் இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து கோட்டைக்காடு வழியாக பெண்ணாடம் வெள்ளாற்றில் கட்டப்பட்ட பாலத்தில் இணைப்பு சாலை அமைத்து உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
சோழன்குடிகாடு கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழரசு கட்சியின் பொது செயலாளர் இயக்குனர் கௌதமன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்த தன்னெழுச்சி போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.