உள்ளூர் செய்திகள்
குண்டு வீசி நீதிக்கட்சி தலைவரை கொல்ல முயற்சி
குண்டு வீசி நீதிக்கட்சி தலைவரை கொல்ல முயற்சியில் போலீசார் விசாரணை
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் வல்லம் கிராமத்தை சேர்ந் தவர் சுப இளவரசன். தமிழர் நீதிக் கட்சியின் நிறுவனரான இவர், தற்போது மேலக்குடியிருப்பு கிராமத்தில் வசித்து வருகிறார். நேற்று இவர் வந்த கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டு வீசியும் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இது பற்றி ஜெயங்கொண்டம் போலீசில் சுப இளவரசன் புகார் அளித்தார். அதில், திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு உடையார்பாளையத்தில் இருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் துளா ரங்குறிச்சி பைபாஸ் பிரிவு சாலையில் வந்தபோது,
அடையாளம் தெரியாத 15 பேர் கொண்ட கும்பல், எனது கர் மீது துப்பாக்கியால் சுட்டனர். மேலும் அவர்கள் கையில் வைத்திருந்த வெடிகுண்டுகளை வீசி தாக்கினர். ஆனால் காரை நிறுத்தாமல் வந்துவிட்டோம்.
எனவே துப்பாக்கியாலும், வெடிகுண்டுகளாலும் தாக்கிய நபர்கள் மீது, ஆயுதங் கள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு சட்டத்தின் கீழும், சதித்திட்டம் தீட்டி கொலை செய்ய முயன்றவர்கள் என கொலை முயற்சி பிரிவின் கீழும் வழக்குப்பதிந்து மேற்படி நபர்களை கைது செய்ய வேண்டும். எனது உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதால், எனக்கும், எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, கூடுதல் சூப்பிரண்டு திருமேனி, ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் ஆகியோர் சுபஇளவரசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.