உள்ளூர் செய்திகள்
புதிய கட்டிடத்தை பள்ளிக்கு வழங்ககோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது
அரியலூர்:
அரியலூர் அருகே தாமரை குளத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில், புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை, பள்ளிக்கே வழங்கக்கோரி, அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தொலைபேசி வாயிலாகவும், சம்பவ இடத்துக்கு வந்த வருவாய் வட்டாட்சியர் ராஜமூர்த்தி, வரும் 24-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வுக் காணலாம் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து உண்ணாவிர போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.