உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம்-ஜிப்மரில் திடீர் போராட்டம்

Published On 2022-02-07 14:32 IST   |   Update On 2022-02-07 14:32:00 IST
ஜிப்மரில் ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கத்தால் திடீர் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:

புதுவை ஜிப்மரில் ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப ஊழியர்களாக 260 பேர் வேலை செய்கின்றனர்.

இவர்களில் 5 பேரை கடந்த சனிக்கிழமை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்தனர். இத்தகவல் மற்ற ஊழியர்களுக்கு தெரிய வந்தது. 

இதையடுத்து ஒப்பந்த ஊழியர்கள் ஜிப்மர் வளாகத்தில் ஒன்று திரண்டனர். நிர்வாகத்திடம், எப்படி திடீரென பணிநீக்கம் செய்யலாம்? என கேள்வி எழுப்பினர். 

இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். போலீசாருடன் ஊழியர்கள் வாக்குவாதம் செய்தனர். மேலும் தள்ளு&முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ஊழியர்களை போலீசார் கைது செய்து கோரிமேடு போலீஸ்நிலையம் அழைத்துச்சென்றனர். அங்கு ஊழியர்கள் போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Similar News