உள்ளூர் செய்திகள்
பெண் காவலர்கள் உடற்தகுதி தேர்வு நடந்தது.

போலீஸ் காலிப்பணியிடங்கள்: பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு தொடக்கம்

Published On 2022-02-07 14:23 IST   |   Update On 2022-02-07 14:23:00 IST
போலீஸ் காலிப்பணியிடங்கள் பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு தொடங்கியது.
புதுச்சேரி:

புதுவை காவல் துறையில் காலியாக இருந்த 390 காவலர்கள்,12 ரேடியோ டெக்னீசியன், 29 டெக்ஹேண்ட்லர் என மொத்தம் 431 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 

இதில் ஆண்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 8&ந்தேதி தொடங்கி முடிவடைந்தது. இந்தநிலையில் பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு  (7ந்தேதி) தொடங்கி வருகிற 11ந்தேதி வரை நடைபெறுகிறது.

காலை தொடங்கிய பெண்களுக்கான உடற்தகுதி தேர்வில் 200 மீட்டர் ஓட்டபந்தயம், நீளம் தாண்டுதல்,உயரம் தாண்டுதல் ஆகிய நடைபெற்று வருகிறது/

Similar News