உள்ளூர் செய்திகள்
சூரமங்கலம் அப்பா பைத்தியசாமி கோவிலில் அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

அப்பா பைத்தியம் சுவாமி கோவில்களில் குருபூஜை- ரங்கசாமி,நமச்சிவாயம் பங்கேற்பு

Published On 2022-02-07 13:53 IST   |   Update On 2022-02-07 13:53:00 IST
சேலம்- மற்றும் புதுவையில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோவில்களில் குருபூஜை விழா நடந்தது. இதில் முதல்&அமைச்சர் ரங்கசாமி-, நமச்சிவாயம் பங்கேற்றனர்.
புதுச்சேரி:

சேலம் சூரமங்கலத்தில் உள்ள சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவிலில் 22-ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது.

இதையொட்டி காலை 7 மணி முதல் ஞான விநாயகர், ஞான முருகர், சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், 12.30 மணிக்கு மகாதீபாராதனை நடந்தது. மதியம் ஒரு மணிக்கு அன்னமளிப்பு விழா நடந்தது. 

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் பக்தர்கள் செய்திருந்தனர். குருபூஜை விழாவில் அமைச்சர் நமச்சிவாயம், அவரது மனைவி மனைவி வசந்தி, காரைக்கால் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன், அ.தி.மு.க. கிழக்கு மாநில தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதபோல புதுவை திலாசுப்பேட்டையில்  உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் குருபூஜை விழா நடந்தது. காலை 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு நடந்தது. 7.30 மணிக்கு அப்பா பைத்தியம் சுவாமிக்கு தமிழில் வேள்வி வழிபாடு, 9 மணிக்கு வேள்வி நிறைவு, திருமுறை விண்ணப்பம், தீபாராதனை நடந்தது. 

காலை 10 மணிக்கு அபிஷேகம், திருக்குட நன்னீராட்டு, 12 மணிக்கு திருமுறை விண்ணப்பம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள்  ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமி காந்தன், பாஸ்கர் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Similar News