உள்ளூர் செய்திகள்
எலிமருந்து தின்று வக்கீல் தற்கொலை
புதுவையில் எலிமருந்து தின்று வக்கீல் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை நயினார்மண்டபம் வள்ளலார் நகர் யமுனை வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது73). இவர் புதுவை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் கணேஷ்(39) என்ற மகன் உள்ளனர். 2 மகள் களுக்கு திருமணமாகி விட்டது. கடந்த 17 ஆண்டுக ளுக்கு முன்பு ரேவதி இறந்து விட்டார்.
கணேஷ் டாக்டருக்கு படித்து முடித்து பெங்களூரு வில் தங்கி மேற்படிப்பு படித்து வந்தார். இதனால் ஆறுமுகம் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்வதற்காக கணேஷ் தனது தந்தையுடன் இருந்து வந்தார்.
இதற்கிடையே ஆறுமுகம் சிலரிடம் பணம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் ஆறுமுகம் இனிப்பில் எலி மருந்து கலந்து தின்று விட்டார்.
இதில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த ஆறுமுகத்தை அவரது மகன் கணேஷ் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆறுமுகம் நேற்று மதியம் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் புதுவை முத்திரையர் பாளையம் காந்திதிருநல்லூர் ஓடை தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி ஞானசுந்தரி (39). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
ஞானசுந்தரி மேட்டுப் பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
இதற்கிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணன் திடீரென இறந்து போனார். கணவர் இறந்து போனததால் ஞானசுந்தரி மனவருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 4&ந் தேதி ஞானசுந்தரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்த ஞானசுந்தரியை அவரது மகள்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஞானசுந்தரி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகள் கீர்த்திகா கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.