உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

காங்கிரஸ்தான் கவர்னர்களை ஒற்றர்களாக பயன்படுத்தியது- புதுச்சேரி பா.ஜனதா கண்டனம்

Published On 2022-02-06 14:20 IST   |   Update On 2022-02-06 14:20:00 IST
காங்கிரஸ்தான் கவர்னர்களை ஒற்றர்களாக பயன்படுத்தியது என்று புதுச்சேரி பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:

புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமி நாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னர்களை ஒற்றர்களாக மத்திய அரசு பயன் படுத்துவதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி கூறியுள்ளார். அவருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். 

பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது தான் கவர்னர்கள் ஒற்றர்களாகவும், தொலைபேசியை ஒட்டுக் கேட்பவர்களாகவும்பயன்படுத்தப்பட்டனர். காங்கிரஸ் ஆட்சியில் 356-வது சட்டப் பிரிவை பயன்படுத்தி கவர்னர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பல ஆட்சிகள் கலைக்கப்பட்டது. 

ஆனால் வாஜ்பாய், மோடியின் 14 ஆண்டு கால ஆட்சியில் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதுவும் கலைக்கப்பட்ட தில்லை. நாராயணசாமி இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் ஒற்றர்களாக எப்படி செயல் படுகின்றனர்? என்பதை தெரிவிக்க வேண்டும். 

காங்கிரஸ் இல்லாத புதுவை உருவாகியுள்ளது. இதற்கு நாராயணசாமிதான் காரணம். இப்போது காங்கிரசுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் மட்டும்தான் உள்ளனர். அவர்கள் இருவருமே இறக்குமதி செய்யப்பட்டவர்கள்தான். 

பல மாநிலங்களில் காங்கிரஸ் வீழ்ச்சியை சந்தித் துள்ளது. புதுவை கவர்னர் தமிழிசை நேர்மையாக செயல்படுகிறார். நிதி தட்டுப்பாடும் புதுவைக்கு இல்லை. மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற முழுமையான நிதியை மத்திய அரசே தருகிறது. 

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் சாலை, வாய்க்கால் உட்பட உள்கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இப்போது சாலை பணிகளை தொடங்கியுள்ளோம். எங்கள் ஆட்சியில் நகரம், கிராமம் என அனைத்து பகுதியிலும் சாலைகள் மேம்படுத்தப்படும். 

புதுவை பா.ஜனதாவை அமைப்பு ரீதியில் பலப்படுத்த தொகுதி நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பட்ஜெட் குறித்து மாநில நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்த மத்திய மந்திரி பிரகாஷ்சிங் படேல் புதுவைக்கு வருகிறார். வருகிற (புதன்கிழமை) சன்வே ஓட்டலில் கட்சி பொறுப்பாளர் சுரானா, மத்திய மந்திரி ஆகியோர் நிர்வாகிகளுடன் பேசுகின்றனர். 

வாரிய பதவி நிதியை சரி செய்த பின் தருவதாக முதல்-அமைச்சர் கூறியுள் ளார். எம்.எல்.ஏ.க்கள், கட்சியினருக்கு வாரிய தலைவர் பதவி அளிக்கப்படும். கட்சி என்றால் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும். அதை நாங்கள் பேசி தீர்ப்போம். 

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி முழுமை யாக 5 ஆண்டுகள் நீடிக்கும். கடந்த 5 ஆண்டு காலத்தில் சென்சார் போர்டு உட்பட பல்வேறு பதவிகள் மத்திய அரசால் புதுவை பா.ஜனதாவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News