உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

ஏழைகளை பாதிக்கும் வகையில் மின் கட்டண உயர்வு: தி.மு.க. குற்றச்சாட்டு

Published On 2022-01-20 05:13 GMT   |   Update On 2022-01-20 05:13 GMT
தனியார் மயத்தை அமுல்படுத்த ஏழைகளை பாதிக்கும் வகையில் மின் கட்டண உயர்வுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.
புதுச்சேரி :

புதுவை சட்ட மன்ற எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:&

இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு இந்த ஆண்டு 100 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு ரூ.35 பைசாவும், 100&ல் இருந்து 200 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு ரூ.15 பைசாவும் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் அதற்கு மேலான பயன்பாட்டிற்கு கட்டணம் உயர்த்த பரிந்துரை செய்யப் படவில்லை.

வீட்டு உபயோக பயன் பாட்டிற்கு மொத்தமாக உயர்த்தப்பட்ட ரூ.50 பைசாவை மின்துறை வசூலிக்கும் 4 பிரிவிற்கும் பிரித்து போட்டால் முதல் 100 யூனிட் வரை பயன்படுத்தும் மிகவும் ஏழைகளுக்கு ரூ.5 பைசா அளவிற்கே உயரும். ஆனால் திட்டமிட்டு ஏழைகள் அதிகம் பாதிக்கும் வகையில் கட்டணத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

மேலும் மக்கள்  குறைந்த யூனிட் பயன்படுத்தினாலும் அதிக கட்டணத்தை செலுத் தச் செய்யும் வகையிலும்  இந்த பரிந்துரை உள்ளது.  குறிப் பாக இந்த பரிந்துரை மின்துறையை தனியார் மயமாக்கு வதற்கான முடிவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக தெரிகிறது. 

அதாவது கார்ப்ரேட் நிறுவனங்களின் கொள்கை முடிவின்படி ஏழைகளிடம் அதிகம் பணத்தை பறிக்கும் செயலாக தெரிகிறது. 

எனவே 200 யூனிட் வரையிலான பயன்பாட்டி ற்கு மட்டும் மின் கட்டணத்தை உயர்த்த பரிந் துரைக்கப் பட்டதை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும். அதுபோல் எந்த வகையில் தனியார் மயமாக்க முயற்சித்தாலும் தி.மு.க. அதை கடுமையாக எதிர்க்கும் என்றும் அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News