உள்ளூர் செய்திகள்
பல்கலைக்கழகத்தை கண்டித்து தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்பாட்டம் நடந்தது.

புதுவை பல்கலைக்கழகத்தை கண்டித்து மாணவர் கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம்

Published On 2022-01-05 08:58 GMT   |   Update On 2022-01-05 08:58 GMT
புதுவை பல்கலைக்கழகத்தை கண்டித்து மாணவர் கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி:

ஜனநாயக மாணவர் இயக்கங்களின் கூட்டியக்கம் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் மணிமாறன் தலைமை வகித்தார். இந்திய மாணவர் சங்க செயலாளர் பிரவீன்குமார் வரவேற்றார். பல்வேறு மாணவர் அமைப்புகளை சேர்ந்த எழிலன், இளவரசன், ஜெயபிரகாஷ், சுவாமிநாதன், கல்யாணசுந்தரம், ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

எதிர்கட்சித்தலைவர் சிவா, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், மாணவர் சங்க அகில இந்திய தலைவர் சானு, மார்க்சிஸ்டு சுதா சுந்தர்ராமன், கம்யூனிஸ்டு (எம்.எல்.) பாலசுப் பிரமணியம், ம.தி.மு.க. கபிரியேல், திராவிடர் கழகம் சிவவீரமணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆதிரை நன்றி கூறினார். 

புதுவை மத்திய பல்கலைக்கழக கல்வி கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான ஜனநாயக விரோத நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும். பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட 25 சதவீத கல்வி கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும். 

புதுவை மாணவர்களுக்கு அனைத்து பாடப்பிரிவிலும் 25 சதவீத இடங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Tags:    

Similar News