உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசினார்.

மத்திய அரசு திட்டங்கள் குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு

Published On 2022-01-05 14:23 IST   |   Update On 2022-01-05 14:23:00 IST
மத்திய அரசின்ங்கள் குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு திட்டஏற்படுத்தப்பட்டது.
புதுச்சேரி:
மத்திய அரசின்  மீன்வளத் துறை அமைச்சகம் மூலம் பிரதமரின் மத்யஸ்த சம்பதா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் குறித்து மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அரசின் மீன்வளத்துறை, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் இணைந்து பங்குதாரர்களின் விழிப்புணர்வு கூட்டத்தை மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடத்தியது. 

மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி வர வேற்றார். மீன்வளத்துறை செயலர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். அமைச்சர் லட்சுமி நாராயணன் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். 

நிகழ்ச்சியில் மத்திய அரசின் 18 திட்டங்கள் குறித்த சந்தேகங்கள், திட்ட மானியம், வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள், மத்திய அரசின் அதிகாரிகள் விளக்கமளித்தனர். 

மீன்பிடிப்பது முதல் நுகர்வோர் வரை தொடர் வழிகாட்டு உதவி, மீன்வள மேலாண்மை கூட்டமைப்பு, மீனவர்கள் நலன் குறித்து துணை, உதவி இயக்குனர்கள் விளக்கினர்.  மீன்வளத்துறை இணை இயக்குனர் தெய்வசிகாமணி நன்றி கூறினார்.

Similar News