உள்ளூர் செய்திகள்
புதுவை பழைய துறைமுகத்தில் தற்காலிக மருத்துவமனை அமைக்கக்கூடாது-காங்கிரஸ் எதிர்ப்பு
பழைய துறைமுகத்தில் தற்காலிக மருத்துவமனை காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
புதுச்சேரி:
காங்கிரஸ் பொதுச்செயலாளர் இளையராஜா வெயிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை உப்பளம் தொகுதி பழைய துறைமுகத்தில் தற்காலிக மருத்துவமனை அமைக்க முதல்-அமைச்சர் ஆய்வு செய்துள்ளார். இங்கு மருத்துவமனை அமைத்தால் உப்பளம் தொகுதி மக்கள் ஒமைக்ரான் தொற்றால் அதிகளவு பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும்.
இதனால் பல உ யிரிழப் புகள் ஏற்படும். ஏற்கனவே தொகுதி மக்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். புதுவையிலேயே உப்பளம் தொகுதிதான் மிகவும் பின் தங்கிய தொகுதியாக உள்ளது.
இந்நிலையில் இங்கு மருத்துவமனை அமைப்பதை அரசு கைவிட வேண்டும். இங்கு மருத்துவமனை அமைத்தால் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா அரசை கண்டித்து காங்கிரஸ் தலைமை ஒப்புதலுடன் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
மற்ற மாநிலங்கள் போல புதுவையில் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள் திறப்பால் மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே 8&ம் வகுப்பு வரை ஆன்லைனில் வகுப்புகளை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.