உள்ளூர் செய்திகள்
பாகூரில் தடுப்பூசி செலுத்த பஸ்சில் இருந்து இறங்கி செல்லும் காட்சி.

பாகூர்: பஸ்சை தடுத்து நிறுத்தி பயணிகளுக்கு தடுப்பூசி

Published On 2022-01-04 14:00 IST   |   Update On 2022-01-04 14:00:00 IST
பாகூரில் பஸ்சை தடுத்து நிறுத்தி பயணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது-.
பாகூர்:

புதுவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சுகாதாரத்துறை மற்றும் பாகூர் போலீசார் மணிக்கூண்டு எதிரே இன்று கொரோனா தடுப்பூசி முகாமினை ஏற்படுத்தி இருந்தனர்.

அதில் பாகூர் வீதிகளுக்கு வரும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்று ஆய்வு செய்து தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அங்கேயே தடுப்பூசி செலுத்தினர். 

மேலும் அவ்வழியாக வரும் பஸ் மற்றும் வாகனங்களை நிறுத்தி தடுப்பூசி செலுத் தாதவர்களை இனம் கண்டு அவர்களை முகா மிற்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று தடுப்பூசி செலுத்தினர்.

இதே போல் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து அவர்களை எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

பாகூர் டாக்டர் அர்ச்சனா, சுகாதாரத்துறை ஊழியர்கள், பாகூர் போலீஸ் சப்&இன்ஸ் பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News