உள்ளூர் செய்திகள்
நமச்சிவாயம்

121 போலீசாருக்கு பதவி உயர்வு ஆணை- அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்

Published On 2022-01-03 16:39 IST   |   Update On 2022-01-03 16:39:00 IST
121 பேருக்கு அதற்கான ஆணையை காவல்துறை தலைமையகத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று வழங்கினார்.

புதுச்சேரி:

புதுவை காவல் துறையில் 15 ஆண்டுகள் பணியாற்றும் காவலர்களுக்கு சிறப்பு நிலை தலைமை காவலர் பதவியும், 25 ஆண்டு பணி முடித்த தலைமை காவலருக்கு சிறப்பு நிலை உதவி சப்-இன்ஸ்பெக்டர் பதவியும் வழங்கப்படுகிறது.

35 ஆண்டு பணி முடித்தவருக்கு சிறப்பு நிலை சப்-இன்ஸ்பெக்டர் பதவி அளிக்கப்படுகிறது.

இதன்படி 30 உதவி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு சிறப்பு நிலை சப்-இன்ஸ்பெக்டர் பதவியும், 43 தலைமை காவலர்களுக்கு சிறப்பு நிலை உதவி சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு காவலருக்கு சிறப்பு நிலை தலைமை காவலர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிறப்பு நிலை தலைமை காவலராக பதவி உயர்வு பெற்றிருந்த 38 பேருக்கு நிரந்தர தலைமை காவலராக பதவி உயர்வு, 7 சிறப்பு நிலை உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், நிரந்தர உதவி சப்-இன்ஸ்பெக்டராகவும், 2 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு பெற்ற 121 பேருக்கு அதற்கான ஆணையை காவல்துறை தலைமையகத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்அலுவால் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Similar News