உள்ளூர் செய்திகள்
புதுவை மாநிலத்தில் புதிதாக 26 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் 865 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
புதிதாக 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டது. இதில் புதுவையில் 23, காரைக்காலில் 3 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 26, காரைக்காலில் 11, மாகியில் 3 பேர் என 40 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 15, காரைக்காலில் 4, ஏனாம், மாகியில் தலா ஒருவர் என 21 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்த மாக இதுவரை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 553 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 517 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுவையில் 87, காரைக்காலில் 20, மாகியில் 8 பேர் என 115 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 155 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 881 ஆக உள்ளது.
புதுவையில் 2-வது தவணை உட்பட 14 லட்சத்து 6 ஆயிரத்து 822 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.