உள்ளூர் செய்திகள்
நமச்சிவாயம்

1 முதல் 8 வரை நேரடி வகுப்புகள் ரத்தா?- அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்

Published On 2022-01-03 02:48 GMT   |   Update On 2022-01-03 02:48 GMT
புதுவையில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. ஒமைக்ரான் பாதிப்பும் 2 பேருக்கு தான் கண்டறியப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி ஒமைக்ரான் என்ற புதிய தொற்றும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பக்கத்து மாநிலமான தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் வருகிற 10-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. புதுவை மாநிலத்தை பொறுத்தவரை தமிழக பாடத்திட்டமே பின்பற்றப் படுகிறது. எனவே புதுச்சேரியிலும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் நமச்சிவாயத்திடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

புதுவையில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. ஒமைக்ரான் பாதிப்பும் 2 பேருக்கு தான் கண்டறியப்பட்டுள்ளது. தரமான கல்வியை ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு தர முடியுமா? என்பது சந்தேகம்.

எனவே பள்ளிகளில் நேரடி வகுப்புகளை ரத்து செய்வது தொடர்பாக சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
Tags:    

Similar News