உள்ளூர் செய்திகள்
புதுவை கடற்கரை சாலையில் சைரன் அடித்தபடி தீயணைப்பு வாகனம் வேகமாக சென்றதால் பரபரப்பு
தீயணைப்பு வாகனம் குபேர் சாலையை கடந்து வைத்திக்குப்பத்தை நோக்கி சென்றது. அங்கிருந்த பொதுமக்களோ தீ விபத்து ஏற்பட்டதாக கருதி அதிர்ச்சியடைந்தனர்.
புதுச்சேரி:
புதுவை தீயணைப்பு நிலையத்திற்கு இன்று காலை போன் ஒன்று வந்தது.
அதில் பேசிய சிறுமி வைத்திக்குப்பத்தில் உள்ள எங்கள் வீட்டின் மீது உயர் மின்அழுத்த கம்பம் விழுந்ததாகவும், இதனால் வீட்டை விட்டு யாரும் வெளியே வரமுடியவில்லை எனவும் கூறினார். அதன்பேரில் உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் தீயணைப்பு வாகனத்தில் சைரன் அடித்தபடி குபேர் சாலையில் அதிவேகமாக சென்றனர்.
இதனால் அங்கு குடியிருந்த சுற்றுலா பயணிகள் கடலின் உள்ளே யாரோ இழுத்து செல்லப்பட்டதாகவும், அவரை காப்பாற்ற தீயணைப்பு வாகனம் வந்ததாகவும் எண்ணி அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால் தீயணைப்பு வாகனம் குபேர் சாலையையும் கடந்து வைத்திக்குப்பத்தை நோக்கி சென்றது. அங்கிருந்த பொதுமக்களோ தீ விபத்து ஏற்பட்டதாக கருதி அதிர்ச்சியடைந்தனர். ஆனால் பின்னர் தான் தெரிந்தது டி.சுனாமி குடியிருப்பில் உள்ள தெருவில் வீட்டின் மீது மின்கம்பம் சாய்ந்தது தெரியவந்தது. இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்தது.
தீயணைப்பு வாகனம் சைரன் அடித்தபடி வேகமாக வந்ததால் அந்த பகுதியில் கூட்டம் கூடியது. மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தீயணைப்பு படைவீரர்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.