உள்ளூர் செய்திகள்
மக்கள் கூடும் இடங்களில் பரிசோதனை நடத்த வேண்டும்- கவர்னர் தமிழிசை உத்தரவு
புதுச்சேரியில் மக்கள் கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா தொழிலை நம்பியுள்ள மக்களின் பொருளாதார நலன் மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அரசு முழு தளர்வு அளித்துள்ளது. இதற்கிடையே ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அந்த மாநில அரசுகள் தடை விதித்துள்ளது. இதனால் புதுவைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதற்கிடையே புதுச்சேரியில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் வழிமுறைகளையும் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்து கண்காணிப்பில் வைப்பது போன்ற நடை முறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முககவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடை வெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா வழிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
கொரோனா நடைமுறைகள் குறித்து அறிவிப்புகள் செய்ய வேண்டும். அவை பின்பற்றப்படுவதை கண் காணிக்க சிறப்பு குழுக்களை அமர்த்த வேண்டும். கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வருபவர்கள் முககவசம் அணிந்து இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வெப்பமானி உதவியோடு உடல் வெப்பத்தை பரிசோதனை செய்ய வேண்டும்.
மக்கள் கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனைகள் நடத்த வேண்டும். தொற்று அறிகுறி காணப்பட்டவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ உதவி அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.