உள்ளூர் செய்திகள்
ஒமைக்ரான் வைரஸ்

புதுச்சேரியிலும் நுழைந்தது ஒமைக்ரான்

Published On 2021-12-28 12:50 IST   |   Update On 2021-12-28 12:50:00 IST
புதுச்சேரி மாநிலத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பிற நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை  நிலவரப்படி ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 186 பேர்  ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 167 பேரும், டெல்லியில் 165 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் 49, ராஜஸ்தான் 46, தெலங்கானா 55, கர்நாடகாவில் 31, கேரளாவில் 57 பேர், ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தமிழ்நாட்டில் 34 பேர் ஒமைக்ரான் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

80 வயது முதியவர் மற்றும் 20 வயது வாலிபர் என இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Similar News