உள்ளூர் செய்திகள்
புதுவை அரசு சார்பில் பொங்கல் பரிசாக 10 இலவச பொருட்கள்
புதுவை அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ மூலம் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க இடெண்டர் கோரப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2018-ம் ஆண்டு முதல் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தீபாவளிக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இதன்படி ரேசன் கடைகள் மூலம் சர்க்கரை, இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் சமீபத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டாவது புதுவையில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில் புதுவை அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ மூலம் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க இடெண்டர் கோரப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் மஞ்சள்-100 கிராம், பச்சரிசி- 2 கிலோ, கடலை பருப்பு- 1/2 கிலோ, துவரம்பருப்பு- 1/2 கிலோ, உளுந்து- 1/2 கிலோ, பச்சைப்பயறு- 1/2 கிலோ, வெல்லம் -1 கிலோ, முந்திரி-50 கிராம், திராட்சை- 50 கிராம், ஏலக்காய்-10 கிராம் வீதம் 19 பொருட்கள் 3 லட்சத்து 31 ஆயிரம் ரேசன்கார்டுகளுக்கு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இந்த டெண்டர் வருகிற 30-ந் தேதி மதியம் ஒரு மணியோடு முடிவடைகிறது. கடந்த காலங்களில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும்போது பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு 7 பைகள் எடுத்துவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது அதுபோன்ற நிலையை ஏற்படுத்தாமல், 10 பரிசு பொருட்களையும் தனித்தனியாக பார்சல் செய்து அதை ஒட்டுமொத்தமாக ஒரே பையாக வழங்க திட்டமிட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு சிரமமின்றி பெற்றுச்செல்ல வசதியாக இதுபோன்ற ஏற்பாடுகளுடன் டெண்டர் விடப்பட்டுள்ளது.
பாப்ஸ்கோ நிறுவனம் சார்பில் புதுவை, காரைக்கால், மாகி ஆகிய பிராந்தியங்களுக்கு இந்த பொங்கல் பரிசு பொருட்கள் ரேசன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக இந்த பொருட்களை ரேசன் கடைகள் மூலம் வழங்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதையும் படியுங்கள்...தமிழகத்தில் ஒமைக்ரான் அச்சுறுத்தல்- அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர்