செய்திகள்
நடிகர் சூர்யாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ம.க.வினர்.

ஈரோட்டில் நடிகர் சூர்யாவை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-11-17 15:19 IST   |   Update On 2021-11-17 15:19:00 IST
ஈரோடு மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடிகர் சூர்யாவை கண்டித்து இன்று வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு:

ஈரோடு மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடிகர் சூர்யாவை கண்டித்து இன்று வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர மாவட்ட மாநில துணை பொதுச்செயலாளர் தா.ப. பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் பிரபு, ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பெருமாள், பா.ம.க மாநில செயற்குழு உறுப்பினர் பொ.வை.ஆறுமுகம், ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நடிகர் சூர்யாவை கைது செய்ய வலியுறுத்தியும், அன்புமணி ராமதாஸ் எம்.பி. இடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கண்டன கோசங்கள் எழுப்பினர்.


Tags:    

Similar News