செய்திகள்
ரூ.1லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் வழங்கிய காட்சி.

மங்கலம் ஊராட்சிக்கு நடமாடும் எரியூட்டு மின்மயான வாகனம்

Published On 2021-11-06 15:02 IST   |   Update On 2021-11-06 15:02:00 IST
தமிழகத்திலேயே முதன் முறையாக மங்கலம் ஊராட்சிக்கு நடமாடும் எரியூட்டு மின்மயான வாகனம் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.25 லட்சத்தில் தயாரிக்கப்படவுள்ளது.
மங்கலம்:

திருப்பூர் ஒன்றியம் மங்கலம் ஊராட்சியில் மின்மயானம் இல்லை. ஆகவே மங்கலத்தில் மின்மயானம் அமைத்து தரவேண்டும் அல்லது நடமாடும் எரியூட்டும்  மின்மயான வாகனம் உருவாக்கித்தர வேண்டும் என்பது மங்கலம் ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

இந்தநிலையில் மங்கலம் ஊராட்சிக்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் மூர்த்தி தலைமையில் பொதுமக்களின் பங்களி ப்புடன் நடமாடும் எரியூட்டு மின்மயான வாகனம் தயாரிக்கப்படவுள்ளது. இதுகுறித்து மூர்த்தி கூறுகையில்:-

தமிழகத்திலேயே முதன் முறையாக  மங்கலம் ஊராட்சிக்கு  நடமாடும் எரியூட்டு  மின்மயான வாகனம் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.25 லட்சத்தில் தயாரிக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்திற்கு முதற்கட்டமாக நடமாடும் எரியூட்டும் மின்மயான வாகனம் தயாரிப்பதற்கு ரூ.1லட்சத்திற்கான காசோலையை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களிடம் ரூ.1லட்சத்திற்கான காசோலையை வழங்கினேன்.

பின்னர் அந்த காசோலையை செய்தித்துறை அமைச்சர் நடமாடும் எரியூட்டும் மின்மயான வாகனம் தயாரிக்கும் நிறுவனத்திடம் வழங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க. கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட பொருப்பாளர் இல.பத்மநாபன் மற்றும் அரசு அதிகாரிகள், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News