செய்திகள்
கோப்புபடம்

இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்தவர் உள்பட 2 பேர் கைது

Published On 2021-09-29 16:23 IST   |   Update On 2021-09-29 16:23:00 IST
வேதாரண்யம் அருகே இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்தவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் மருதூர் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 26), மருதூர் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் துரைமுருகன் (20). இருவரும் நண்பர்கள். மருதூர் வடக்கு கிராமத்தில் ஆனந்த் சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார். துரைமுருகன் அவருடன் பணியாற்றி வருகிறார். ஆனந்துக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது.

இந்தநிலையில் கத்திரிப்புலத்தை சேர்ந்த 15 வயது இளம்பெண் 11வது படித்துவிட்டு கொரானாவால் பள்ளிக்கு செல்ல முடியாததால் அந்த பகுதியில் நடைபெறும் சாலை பணிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 19ம்தேதி இளம்பெண்ணை ஆனந்தும், துரைமுருகனும் சேர்ந்து கடத்தி சென்று ஆனந்த் இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்

இதுகுறித்து இளம்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தையும், துரை முருகனையும் போஸ்கோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News