செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2021-09-29 09:21 GMT   |   Update On 2021-09-29 10:30 GMT
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழையும், சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை (30-ந் தேதி) தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழையும், நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.



அக்டோபர் 1-ந்தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.

2-ந் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசான மழையும், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

3-ந் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை முதல் மிக கனமழையும், சேலம், நாமக்கல், விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை அதிகாரி கீதா தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News