செய்திகள்
இந்திராணி

ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட பெண் வேட்பாளர் திடீர் உயிரிழப்பு

Published On 2021-09-28 11:40 IST   |   Update On 2021-09-28 11:40:00 IST
கலவை அடுத்த நாகலேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பெண் வேட்பாளர் இறந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் உட்பட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது.

இந்த நிலையில் கலவை அடுத்த நாகலேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நாகலேரியை சேர்ந்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியரான இந்திராணி (வயது 57) என்பவர் போட்டியிட்டார்.

அவருடன் அந்த பதவிக்கு 3 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்திராணி கிராம பகுதிக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதனால் கால் வலி காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இந்திராணி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

பஞ்சாயத்து தலைவர் பெண் வேட்பாளர் இறந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


Similar News