செய்திகள்
தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனு தாக்கல்

பாராளுமன்ற மேலவை எம்.பி. பதவிக்கு தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனு தாக்கல்

Published On 2021-09-17 02:54 GMT   |   Update On 2021-09-17 02:54 GMT
பாராளுமன்ற மேலவை எம்.பி. பதவிக்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
புதுச்சேரி:

புதுவை பாராளுமன்ற மேலவை எம்.பி. கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் நிறைவடைவதால் அந்த காலி இடத்துக்கு புதிய எம்.பி.யை தேர்ந்தெடுக்க அக்டோபர் மாதம் 4-ந்தேதி தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்நாளில் சென்னையை சேர்ந்த அக்னி ஸ்ரீராமச்சந்திரன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்தநிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் நேற்று புதுவைக்கு வந்து சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல் புதுவையை சேர்ந்த ஆனந்தன் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்தார். இவர்களை எம்.எல்.ஏ.க்கள் யாரும் முன்மொழியவில்லை. வேட்புமனு தாக்கல் செய்த பத்மராஜன் நிருபர்களிடம் கூறுகையில்,

கடந்த 1986-ம் ஆண்டு முதல் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறேன். இப்போது 221-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், நரசிம்மராவ் உள்ளிட்டவர்களையும் எதிர்த்து போட்டியிட்டுள்ளேன். ஜனாதிபதி, எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளேன். கின்னஸ் மற்றும் லிம்கா சாதனை புத்தகங்களிலும் இடம்பிடித்துள்ளேன். சில நேரங்களில் 8 தொகுதிகளில் போட்டியிடவும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன் என்றார்.
Tags:    

Similar News