செய்திகள்
ரங்கசாமி

அங்கன்வாடி ஊழியர்கள் 393 பேர் பணிநிரந்தரம்- ரங்கசாமி ஆணை வழங்கினார்

Published On 2021-09-14 02:44 GMT   |   Update On 2021-09-14 02:44 GMT
பணிநிரந்தரம் செய்யப்பட்ட 393 அங்கன்வாடி ஊழியர்களுக்கு அலுவலக குறிப்பாணைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி:

புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையில் மதிப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் 221 அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் 172 உதவியாளர்கள் மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்களாக பணிநிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர்.

பணிநிரந்தரம் செய்யப்பட்ட 393 அங்கன்வாடி ஊழியர்களுக்கு அலுவலக குறிப்பாணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு குறிப்பாணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், சிவசங்கர், சமூக நலத்துறை செயலாளர் உதயகுமார், மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குனர் அசோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பணிநிரந்தரம் செய்யப்பட்ட 221 ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.48 லட்சத்து 41 ஆயிரத்து 668-ம், 172 ஊழியர்களுக்கு ரூ.34 லட்சத்து 31 ஆயிரத்து 744 என மொத்தம் ரூ.82 லட்சத்து 73 ஆயிரத்து 412 வழங்கப்பட உள்ளது.
Tags:    

Similar News