செய்திகள்
சுங்கச்சாவடி (கோப்புப்படம்)

இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது- செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கட்டணம் அதிகரிப்பு

Published On 2021-08-31 15:48 IST   |   Update On 2021-08-31 17:50:00 IST
தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:

தமிழகத்தில் 6,606 கி.மீ தேசிய நெடுஞ்சாலை உள்ளன. இவற்றில் 5,134 கி.மீ சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பரமாரித்து வருகிறது. மீதமுள்ள 1,472 கி.மீ சாலைகள் மத்திய அரசின் நிதியில் மாநில நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிப்பவரிடம் கட்டணம் வசூலிப்பதற்காக 49 இடங்களில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் அல்லது சாலை அமைத்த முதலீட்டை திரும்ப பெறும் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். அதற்கு பிறகு 40 சதவீத சாலை பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்.

ஆனால் தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் 8 முதல் 10 சதவீத அளவுக்கு சுங்க கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.

அதன்படி தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவுக்கு பிறகு கட்டணம் உயர்த்தப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.15 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. செங்கல்பட்டு பரனூரில் உள்ள சுங்கச்சாவடியிலும் கட்டணம் ரூ.15 வரை அதிகரிக்கிறது.



தாம்பரம்-திண்டிவனம் இடையே உள்ள ஆத்தூர், சென்னை-தடா இடையே உள்ள நல்லூர், செங்கல்பட்டு பரனூர், சூரப்பட்டு, வானகரம், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, திருச்சி- காரைக்குடி இடையே உள்ள லம்பலக்குடி, லட்சுமணப்பட்டி, மதுரை-ராமநாதபுரம் இடையே உள்ள போகலூர், நாங்குநேரி, திருச்சி பூதக்குடி, கந்தர்வக்கோட்டை பழையா, பள்ளிகொண்டார், திருச்சி சித்தம்பட்டி, பட்டரை பெரும்புதூர், வாகைக்குளம் புதுக்கோட்டை, திருப்பதி- திருத்தணி சாலையில் உள்ள எஸ்.வி.புரம், திருநெல்வேலி- கன்னியாகுமரி சாலையில் உள்ள சாலைப்புதூர், எட்டூர் வட்டம், கப்பலூர், திருமயம்- மானாமதுரை இடையே உள்ள செண்பகம்பேட்டை, மதுரை-ராமநாதபுரம் சாலையில் உள்ள திருப்பாச்சேத்தி, செங்கப்பள்ளி- கோவை பைபாஸ் சாலையில் உள்ள கணியூர் ஆகிய இடங்களில் உள்ள
சுங்கச்சாவடி
களில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

Similar News